ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2022-09-22 13:52 GMT

திருப்பத்தூர் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மலைமாடப்பள்ளி, மடவாளம், குரிசிலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். ஆனால் ஏரிக்கரையின் இருபுறமும் தடுப்புச் சுவர்களோ, தடுப்புக் கம்பிகளோ கிடையாது. இரவில் மின்விளக்குகள் கூட இல்லை. இதனால் இரவில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தவறி ஏரிக்குள் விழும் நிலை உள்ளது. எனவே ஏரிக்கரையின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவரோ அல்லது தடுப்புக்கம்பியோ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்