தார் சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-24 14:18 GMT

வாலாஜா ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி மேட்டுத்தெரு மாரியம்மன் கோவில் எதிரில் ஏரிக்கரை வழியாகச் செல்லும் ராமாபுரம் மற்றும் அருந்ததிபாளையம், ஈச்சம்தாங்கல், குப்பத்துமோட்டூர், பாகவெளி, சுமைதாங்கி மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலையை அடையும் தார் சாலை, வள்ளும்பாக்கம் ஊராட்சி மேட்டுத்தெரு மாரியம்மன் கோவில் எதிரில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக பெய்த மழையின்போது உடைக்கப்பட்டு, இது நாள் வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் உள்ளது. கிராம மக்கள் சாலையை கடக்க வேண்டும் என்றால் சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றி சிண்டிகேட் மற்றும் முசிறி மார்க்கமாக செல்ல வேண்டி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலையை சீரமைப்பார்களா?

-நாராயணன், வாலாஜா. 

மேலும் செய்திகள்