சென்னை-காஞ்சீபுரம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள், லாரிகள், கண்டெய்னர்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் வாலாஜாபேட்டை நகரின் உள்நுழைவு பகுதியான மேம்பாலம் கீழ் உள்ள வளைவில் திரும்பும்போது மிகவும் சிரமப்படுகின்றன. இதனால் விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அந்தச் சாலை மேடும் பள்ளமுமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் சிதைந்து மோசமான நிலையில் உள்ளது. இரவில் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் தார் சாலைைய சீரமைப்பார்களா?
-ராஜமாணிக்கம், வாலாஜா.