தார் சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-05-25 19:37 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் வாலாஜாபேட்டை நகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் 4 சாலைகள் சந்திப்பு பகுதி ஆகும். அங்குள்ள சாலை நெடுஞ்சாலைத்துறையால் விரிவாக்கம் செய்யப்பட்டு தார்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு பகுதி தார் சாலையில் கட்டிடம் முன்பாக சிறிது மழை பெய்தாலே குட்டை போல் மழை நீர் தேங்கி விடுகிறது. இந்த வழியே சாலையை கடக்கும் இருசக்கர வாகனங்கள் அவதிக்குள்ளாகின்றன. உடனடியாக மழை நீர் தேங்காதவாறு நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீர் செய்வார்களா?

-சபாபதி, வாலாஜா. 

மேலும் செய்திகள்

சாலை பழுது