வேகத்தடை சரி செய்யப்படுமா?

Update: 2023-09-06 17:25 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்பக்கம் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு செல்லும் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடையில் சில பகுதியை மட்டும் அகற்றி விட்டு அந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையை சரி செய்வார்களா?

-மாதவன், வேலூர். 

மேலும் செய்திகள்