கண்ணமங்கலம்-படவேடு செல்லும் சாலையில் குப்பம் கிராமப் பகுதியில் ஏற்கனவே சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்து விட்டது. தற்போது குப்பம் கிராமத்தில் இருந்து காளசமுத்திரம் கிராமம் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சாலை குறுகலாக உள்ள நிலையில் இவ்வழியே தனியார், அரசு பஸ்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-கார்த்திகேயன், கண்ணமங்கலம்.