பெரணமல்லூரில் இருந்து வந்தவாசி, செய்யாறு செல்லும் செங்கம்பூண்டி சாலை 5.5 மீட்டர் அகலத்தில் 2018-ம் ஆண்டு அகலப்படுத்தப்பட்டது. தற்போது வரை நன்றாக இருந்த சாலையை கடந்த மாதம் கேபிள் ஒயர் பதிக்க பள்ளம் தோண்டி, 4.5 மீட்டர் அகலமாக சுருக்கி விட்டனர். விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் அளவீடு செய்து தடுப்புச்சுவர் அமைப்பதும், ஏரியின் ஓரம் கால்வாய்கட்டி 7 மீட்டர் அகலம் உள்ள இரு வழித்தடமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பெரணமல்லூர்.