சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-06-25 16:51 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அனந்தலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. சோளிங்கர் சாலையில் இருந்து அனந்தலை போகும் மெயின் சாலையில் ஏரிக்கோடி வரை பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. பெரிய பள்ளங்களும் உள்ளன. மழை பெய்தால் அதிக அளவில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலை வழியே செல்லும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பாதிக்கப்படுகின்றன. வாகன ஓட்டுனர்கள் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயம் அடைவது அதிகரித்து வருகிறது. உடனடியாக தார் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நரசிம்மன், வாலாஜா.

மேலும் செய்திகள்