சாலையை சீரமைக்கப்படுமா

Update: 2022-10-30 11:00 GMT

தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்டது வாணாபுரம். இந்தப் பகுதியில் இருந்து அரசு சுகாதார நிலையம் மற்றும் ஆத்திப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பழையனூர் செல்லும் சாலை உள்ளது. 5 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்தச் சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. மேலும் தண்டராம்பட்டு ஒன்றியத்தின் எல்லையாகவும், திருவண்ணாமலை ஒன்றியத்தின் ஆரம்ப எல்லையாகவும் இருப்பதால் இந்தப் பகுதியை எந்த ஒரு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழையனூர் சாலைைய சீர் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-சிவா, பழையனூர்.

மேலும் செய்திகள்