சிறு பாலத்தின் தடுப்புச்சுவர் சரி செய்யப்படுமா?

Update: 2023-01-18 12:46 GMT

வேலூர் சத்துவாச்சாரி 2-வது மண்டலம் 24- வது வார்டுக்கு உட்பட்ட 5-வது தெருவின் அருகே பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. அந்தக் கால்வாயை பொதுமக்கள் கடந்து செல்ல சிறு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பாலத்தின் தடுப்புச் சுவர் உடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்தச் சிறு பாலத்தின் தடுப்புச் சுவர் சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திருமூர்த்தி, வேலூர்.

மேலும் செய்திகள்