திருப்பத்தூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அங்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பெரிய பள்ளம் உள்ளது. அதில் நோயாளிகள், உதவியாளர்கள் தவறி விழும் அச்சம் உள்ளது. அந்தப் பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிவேல், திருப்பத்தூர்.