வேலூர் தொரப்பாடி சிறை காவலர்கள் குடியிருப்பு அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் கழிவுநீர் தேங்கி காணப்படுவதால் அதன் அருகே உள்ள சாலையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் உள்ள பள்ளத்தை சரி செய்வார்களா?
-பரந்தாமன், வேலூர்.