திருப்பத்தூர் அவ்வைநகர் பகுதியில் உள்ள சாலைகளில் ஏராளமான வேகத்தடைகள் உள்ளன. மேலும் அந்த வேகத்தடைகள் அதிக உயரமாக உள்ளன. இதனால் வாகனங்கள் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது அடிபாகத்தில் உள்ள என்ஜின் உரசி பாதிக்கப்படுகிறது. விபத்துகளும் நடக்கின்றன. வேகத்தடையின் உயரத்தை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலகிருஷ்ணன், திருப்பத்தூர்.