மேம்பால பணி தொடங்கப்படுமா?

Update: 2023-01-04 17:35 GMT

நாட்டறம்பள்ளி அருகே சோமநாயக்கன்பட்டி பகுதியில் நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் மேம்பாலம் பணி ெதாங்கி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. அந்தப் பணி இன்னும் முடியவில்லை. தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ரெயில் வரும்போது கேட் மூடி விடுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேம்பால பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும்.

-இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்