அரக்கோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு பகுதியில் இருந்து அலுவலகம் வரை உள்ள பாதையில் சிமெண்டு பெயர்ந்து ஜல்லிக்கற்கள் சிதறி கரடுமுரடாக கிடக்கிறது. அந்த வழியாக அலுவலகத்துக்கு நடந்து வரும் மக்களின் கால்களை கற்கள் பதம் பார்க்கின்றன. ஒருசிலர் இடறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சிமெண்டு பாதையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-திலக்குமார், அரக்கோணம்.