இரும்பு தடுப்புகள் வைக்கப்படுமா?

Update: 2023-08-27 16:33 GMT

கண்ணமங்கலத்தை அடுத்த அனந்தபுரம் கிராமம் வழியாகச் படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை குறுகலாக உள்ளது. வழிநெடுக வயல்கள் உள்ளன. சாலையோரம் பல்வேறு இடங்களில் பாசனக்கிணறுகள் உள்ளன. அந்தக் கிணறுகள் திறந்த வெளியாக உள்ளன. பாசனக்கிணறுகள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மேலும் இரும்புத்தடுப்புகள் வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரவீன்குமார், படவேடு. 

மேலும் செய்திகள்