வேலூர் சத்துவாச்சாரி வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகே வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. அதன் முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்தக் கால்வாயின் மேற்புறம் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. மேலும் அப்பகுதியில் வாகனங்கள் அதிகமாக செல்வதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆபத்து நடக்காமல் இருக்க உடைந்த சிமெண்டு சிலாப் மீது ஒரு வண்டியை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த சிமெண்டு சிலாப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிகுமார், வேலூர்.