ஏரிக்கரை மீது தார் சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-09-21 12:39 GMT

கண்ணமங்கலம் ஏரிக்கரையில் கவரைத்தெரு வழியாக தொடங்கி ஏரி உபரிநீர் வழிந்தோடும் பகுதி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ஏரிக்கரை மீது செல்பவர்கள் வாகனங்கள் மூலம் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஒற்றையடிப்பாதையாக மாறி விட்ட ஏரிக்கரை வழியாக விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் விளைப்பொருட்களை வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்ல வசதியாக தார் சாலை அமைக்கப்படுமா?

-ஸ்ரீதர், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்