சாலை பணி அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

Update: 2025-04-13 19:31 GMT

கண்ணமங்கலம்-வேலூர் சாலையில் கீழ்பள்ளிப்பட்டு-சந்தனக்கொட்டாய் இடையே ரெயில்வே மேம்பாலம், சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. ஆனால் சாலையில் எந்தவித எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. சாலை பணிகள் பாதுகாப்பு இன்றி நடப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால், சாலை பணி தொடர்பாக அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைப்பார்களா?

-முருகையா, கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது