திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலை குறுக்கே கசிநாயக்கன்பட்டியில் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடையில் ‘வெள்ளை பெயிண்ட்’ அடிக்காததால் வேகமாக வரும் வாகனங்களுக்கு வேகத்தடை இருப்பதே தெரியாமல் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அன்பழகன், திருப்பத்தூர்.