லத்தேரியை அடுத்த பகவதிபுரம், சிவன் கோவில் தெருவில் ஜல்லிக்கற்கள் பரப்பி வைத்து அப்படியே விடப்பட்டுள்ளது. அந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கால்களை ஜல்லிக்கற்கள் குத்தி பதம் பார்க்கின்றன. அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களிலும் பழுது ஏற்படுகிறது. அதிகாரிகள் தார் ஊற்றி சாலைப்பணியை முடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணதாசன், லத்தேரி.