சிறு பாலம் கட்டும் பணி எப்போது முடியும்?

Update: 2023-02-08 17:08 GMT

ஆற்காடு பஜார் வீதியில் ஆரணி செல்லும் சாலையில் சிறு பாலம் இருந்தது. இந்தப் பாலம் தாழ்வாக இருந்ததால் கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்ல இடையூறாக இருந்தது. இதனால் மழைக்காலங்களில் கழிவு நீருடன் சேர்ந்த மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுப்பணித்துறையின் மூலம் சிறு பாலம் இடிக்கப்பட்டு, புதிதாக பாலம் அமைக்கும் பணி நடந்தது. அந்தப் பாலம் சுமார் 4½ அடி உயரத்துக்கு கட்டப்பட்டதால் போக்குவரத்துக்கு தடையாக இருக்கும் எனக் கருதி அதன் உயரத்தை குறைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் எப்போது முடியும் என தெரியவில்லை. பாலம் அமைக்கும் பணியால் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு ஆரணி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சிறு பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்தால் நன்றாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தமிழ்ச்செல்வன், திமிரி.

மேலும் செய்திகள்