திருப்பத்தூர் நகருக்கு புற வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் பணி தொடங்கவில்லை. அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதால் உடனடியாக புறவழிச்சாலை திட்டப்பணியை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜமனோகரன், திருப்பத்தூர்.