திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் வெறையூர் உள்ளது. இங்கு இருசக்கர வாகனங்களை சாைலயை ஆக்கிரமித்து நிறுத்துகிறார்கள். இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை முறையாக நிறுத்த அறிவுறுத்துவது மட்டுமல்லாமல், தொடர்ந்து இதுபோல் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, வெறையூர்.