வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே புதுசக்தி நகர் உள்ளது. இங்கு சாலை பணிக்காகப் பள்ளம் தோண்டி பல ஆண்டுகள் ஆன நிலையில், பாதாள சாக்கடை மூடி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அருகே உடைந்து கிடந்த சக்திநகர் பெயர் பலகையை கொண்டு மூடி உள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாலும், ஆண்டு கணக்கில் அவதிப்படும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தங்கவேல், வேலூர்.