சோளிங்கபுரம் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை இல்லாததால் முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் டிக்கெட் கவுணட்டரில் இருந்து அடுத்தடுத்த பிளாட்பாரத்துக்கு செல்ல ெரயில்வே மேம்பாலத்தின் வழியாக படியில் ஏற முடியாத சூழ்நிலையில் உள்ளனர். ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிகழ்ச்சி நாள்தோறும் நடக்கிறது. எனவே ெரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி சுரங்கப் பாதை அமைத்துத் தர வேண்டும்.
-மோகன், மங்கலம்.