ஆற்காட்டில் உள்ள மாசாபேட்டை, வேலூர் மெயின் ரோடு, அண்ணா சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதால் அப்பகுதியில் கடை நடத்தும் நபர்களின் கடைகளுக்கு முன்னால் கடைக்கு வரும் நபர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் சாலை விரிவாக்கம் செய்வதும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மன்சூர்பாஷா. ஆற்காடு.