ராணிப்பேட்டை மாவட்டம் சங்கம் தெரு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மழைப் பெய்யும் நேரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலாஜி, ராணிப்பேட்டை.