சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-04-12 11:28 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உளியநல்லூர், துறையூர், கோடம்பாக்கம், பெரப்பேரி, மகேந்திரவாடி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, தனியார் கம்பெனிகளுக்கு செல்ல உளியநல்லூர் சாலை வழியாகத்தான் பனப்பாக்கம், காஞ்சீபுரம் பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். அந்தச் சாலை போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. கர்ப்பிணிகள் மருத்துவப் பரிசோதனைக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை. இந்தச் சாலையில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் உளியநல்லர்-பனப்பாக்கம் சாலையை சீரமைக்க முன்வரவேண்டும்.

-பழனி, உளியநல்லூர்.

மேலும் செய்திகள்