சாலைைய சீரமைக்க வேண்டும்

Update: 2023-01-01 17:02 GMT

போளூரில் டைவர்ஷன் ரோடு பகுதியில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி, தனியார் கல்யாண மண்டபம், தனியார் நர்சரி பள்ளி, வீடுகள் உள்ளன. அந்தப் பகுதியில் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் மாடுகளை கட்டி வைக்கிறார்கள். இதனால் அந்தச் சாலையில் செல்ல சிரமமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.ஸ்டாலின், போளூர்.

மேலும் செய்திகள்