ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் இருந்து கன்னிகாபுரம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-சுபாஷ், ஆம்பூர்.