ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் உள்ள, சென்னை- சித்தூர் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாணாபாடி சாலைக்கு செல்ல பாலத்தின் கீழே உள்ள சாலையை உபயோகிக்க வேண்டி உள்ளது. இச்சாலையில் இருந்து வாணாபாடி சாலைக்கு செல்லும் வழி, குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இச்சாலையை அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும்.
-கே.ராமசாமி, ராணிப்பேட்டை.