சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-21 11:25 GMT

வேலூர் அண்ணாசாலை முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ஆர்.சி.சர்ச் செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரைமக்க வேண்டும்.

-ஜான்பிரிட்டோ, வேலூர்.

மேலும் செய்திகள்