சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-15 11:57 GMT

வேலூர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட 16-வது வார்டில் உள்ள எல்.ஐ.சி. காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டு விரிசல் அடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளம் ஏற்பட்டுள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாலன், வேலூர். 

மேலும் செய்திகள்