வாணாபுரம் பகுதியில் இருந்து பழையனூர் செல்லும் சாலை சேதமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் சாலையை சீரமைக்க வில்லை. அந்த வழியாக விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்படும் கரும்பு, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். அத்துடன் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அந்த வழியாக சென்று வருகின்றன. சேதமான சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-சிவா, வாணாபுரம்.