வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள கிருஷ்ணாநகர் போக்குவரத்துக்கழகப் பணிமனையின் எதிரே சங்கரன்பாளையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இரவில் செல்பவர்கள் கீழே விழுந்து செல்லும் அவலம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதம் அடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதுசூதனன், வேலூர்.