திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் புங்கம்பட்டு நாடு பஞ்சாயத்து உட்பட்ட புதூர்நாடு முதல் கம்புகுடி வரையிலான சாலை குண்டும் குழியுமாக மாறி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. பழுதடைந்த சாலையில் பள்ளி மாணவ, மாணவிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் சென்று வர சிரமப்படுகிறார்கள். போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலையாக மாறி விட்டது. சாலையை சீரமைக்க வேண்டி பல முறை மனு அளித்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திங்கட்கிழமை நடக்கும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மலைக் கிராமங்களில் உள்ள எந்தச் சாலைகளும் சீரமைக்கப்படாமலேயே உள்ளன. வனத்துறை அதிகாரிகள் பழங்குடியின மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இச்சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவிந்தராஜ், ஜவ்வாதுமலை