கண்ணமங்கலம் அருகில் உள்ள 5:புத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த சின்னப்புத்தூர் கிராமமும், வாழியூர் ஊராட்சியும் இணையும் சாலை சந்திப்பில் படவேடு செல்லும் சாலை உள்ளது. இந்த 2 சாலையிலும் பால் சொசைட்டி அருகே பள்ளமாக உள்ளதால் மழைநீர் வெளியேற வழியில்லை. அங்கு மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. எனவே மேற்படி சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க சாலையை உயர்த்த வேண்டும்.
பொதுமக்கள், கண்ணமங்கலம்