வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் மெயின் ரோட்டில் சிறிது தூரம் மட்டுமே சாலை அமைக்கப்பட்டுள்ளது. அரசமரத்தெரு செல்லும் அருகே உள்ள சாலை ஆங்காங்கே பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பாதி தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலை பணிகளை முழுமை பெற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், வேலூர்.