ஏலகிரிமலை அருகே அத்தனாவூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து நிலாவூர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் அபாயகரமான வளைவுகளில் சாலை பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மூர்த்தி, திருப்பத்தூர்.