சோளிங்கரை அடுத்த ஆயில் ஏரிக்கரையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சாலை சுமார் 6 அடி அகலம், 50 நீளத்துக்கு சரிந்து சேதமடைந்தது. இந்தச் சாலை தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்கின்றனர். இரவில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்தைத் தடுக்கும் வகையில் இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும்.
-பாஸ்கர், சோளிங்கர்.