பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2022-08-04 14:21 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்-பாணாவரம் சாலையில் புலிவலம் அருகே சிறு பாலம் அமைக்கும் பணிக்காக சாலையின் குறுக்கே பள்ளம் வெட்டப்பட்டுப் பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பள்ளம் வெட்டி நீண்ட நாட்கள் ஆகியும் பணிகள் நிறைவடையாமல் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஞ்சித்குமார், புலிவலம்

மேலும் செய்திகள்