வேலூர் காகிதப்பட்டறை உழவர் சந்தையில் நுழைவுப் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் இரும்பு தடுப்பு கம்பி உள்ளது. அந்தத் தடுப்பு கம்பி காய்கறி வாங்க வரும் மக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடையூறாக இருக்கும் இரும்பு தடுப்பு கம்பியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாரங்கபாணி, வேலூர்.