தினத்தந்திக்கு நன்றி

Update: 2024-07-21 19:41 GMT

வேட்டவலத்தை அடுத்த ஆவூரில் இருந்து நாரையூர் செல்லும் சாலையில் ஏரி பகுதியில் சாலையை அகலப்படுத்துதல், தடுப்புச்சுவர் கட்டுதல் பணி நடந்து வருகிறது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகில் எச்சரிக்கை பலகையோ, தடுப்போ வைக்கப்படவில்லை என்று தினத்தந்தியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தோண்டப்பட்ட பள்ளத்தின் ஓரம் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக தினத்தந்திக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

-சத்தியமூர்த்தி, வேட்டவலம்.

மேலும் செய்திகள்