வேலூர் மாநகராட்சி 31-வது வார்டு சேண்பாக்கம் சந்தான ஈஸ்வரியம்மன் கோவில் தெரு சாலை பழுதடைந்திருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து, சாலையை சீர் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.