ஆரணி-வேலூர் நெடுஞ்சாலை மாங்காமரம் பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் குழாய் புதைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் கடந்த பல மாதங்களாக மூடப்படாமல் இருந்தது. அதில் கழிவுநீர் தேங்கக் கூடிய நிலை இருந்தது. அந்தப் பள்ளத்தில் பலர் விழுந்து எழுந்து செல்லும் அவலம் ஏற்பட்டது. இதுகுறித்த தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியால் பள்ளத்தை சீரமைத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
-ராமராஜு, ஆரணி.