நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே வேலூர்-கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டி சாலை அமைக்கும் பணி நடக்காமல் இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலை போடும் பணியை மேற்கொண்டனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.
-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.