வேலூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சர்வீஸ் ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டு குழியுமாக இருந்த சாலையை சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி ெதரிவித்துக்கொள்கிறோம்.
-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.