ஜோலார்பேட்டை அருகே புது ஓட்டல் தெருவில் கடந்த சில மாதங்களாக குண்டு குழியுமாக இருந்த சாலையை குறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு புதிய சாலை வசதியை அமைக்கும் பணியை தொடங்கினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
-மு. நந்தினி, வெலக்கல்நத்தம்