தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-09-28 11:18 GMT

ஏலகிரிமலை 9-வது கொண்டை ஊசி வளைவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழுதான சாலை சீர் செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்த இடத்தில் மீண்டும் பழுதாகி மணல், ஜல்லி கற்கள் பெயர்ந்திருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட அதிகாரிகளுக்கும் நன்றி.

-த.வீரமணி, ரெட்டியூர்.

மேலும் செய்திகள்